2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் நட்டம் தொடர்பில் மற்றுமொரு விடயம் அம்பலம்

Editorial   / 2018 ஒக்டோபர் 22 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

280 பயணிகள் பயணிக்கக் கூ​டிய ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் விமானமொன்றில், 32 அதி விசேட பிரமுகர்கள் ரஷ்யாவுக்கு நேரடி விமான பயணத்தை மேற்கொண்டமையால், ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் மற்றுமொரு பாரிய நட்டத்தை ​ சந்தித்துள்ளதாக, இந்த விமான நிறுவனத்தின் சிரேஸ்ட முகாமையாளர் அவந்தி அபேசிங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள ஊழல் சம்பவங்கள் குறித்து ஆராய்வதற்காக, நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழுவிடம் அவந்தி அபேசிங்க  இந்த நட்டம் தொடர்பில் தெரிவித்துள்ளார்.

2011ஆம் ஆண்டு ஜுன் மாதம் 16ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பெக் விமான நிலையத்தை சென்றடைந்த குறித்த அதி விசேட பிரமுகர்கள் 32 பேரும் ஜுன் மாதம் 18ஆம் திகதி ரஷ்யாவிலிருந்து நேரடியாக கட்டுநாயக்க விமானக நிலையத்தை வந்தடைந்ததாகவும் அவந்தி அபேசிங்க  குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .