2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

ஹிருணிக்காவின் கடத்தல் விவகாரம்: டிவிடி அனுப்பிவைப்பு

Gavitha   / 2016 ஜனவரி 13 , மு.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாருக் தாஜூதீன், ஷெஹான் சாமிக்க சில்வா

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட கடத்தல், ஹிருணிகாவினால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாடு ஆகியவற்றின் காட்சிகளை பரிசோதனைக்கு அனுப்பி அறிக்கை சமர்ப்பிக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேற்படி வழக்கு, கொழும்பு மேலதிக நீதவான் மொஹமட் மிஹிரன் முன்னிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே, வெல்லம்பிட்டிய பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

தெமட்டக்கொடயில் நடந்த ஆட்கடத்தல் சம்பவத்தை டிவிடி (டிஜிட்டல் வேர்ஸடைல் டிஸ்க்) ஆகவும், ஹிருணிக்கா பிரேமச்சந்திர எம்.பி, நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டை டிவிஆர் (டிஜிட்டல் வீடியோ ரெக்கோடர்)ஆகவும், மொறட்டுவைப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிவைக்குமாறும் மேலதிக நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, ஹிருணிக்கா, தனது டிபெண்டர் வாகனத்தை மீளப்பெறவிரும்பின், ஜனவரி 26ஆம் திகதி இடம்பெறவுள்ள அடுத்த விசாரணை தினத்தில் தெரிவிக்குமாறு கூறிய மேலதிக நீதவான், அவ்வாகனத்தை தடுத்து வைக்குமாறு கட்டளையிட்டார்.

இதேவேளை, தனக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, ஊடகங்களுக்கு கருத்துகளை தெரிவித்து வருவதனால், அவரை நீதிமன்றுக்கு அழைத்து எச்சரிக்குமாறு, ஹிருணிக்காவின் சட்டவுரைஞர் கேட்டார்.

நீதிமன்றுக்கு வெளியே கூறியதை வைத்து நீதிமன்றம்; நடவடிக்கை எடுக்காது எனத்தெரிவித்த நீதவான், நீதிமன்றில் வெளிப்படுத்தப்பட்ட விடயங்களின் அடிப்படையில் செயற்படுத்துவதே நீதிமன்றின் கடமை எனக் கூறினார்.

இந்நிலையில், குறித்த வழக்கு ஜனவரி 26ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X