2025 ஜூன் 12, வியாழக்கிழமை

ஹெலியை வீடியோ செய்தவர் கைது

Kanagaraj   / 2016 செப்டெம்பர் 17 , மு.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த ஹெலிகொப்டரை, தன்னுடைய அலை பேசியில் வீடியோ செய்த்தாக கூறப்படும் இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அந்த ஹெலி, பம்பலப்பிட்டிய பொலிஸ் மைதானத்தில், நேற்று தரையிறங்கிய போதே, வெள்ளவத்தையில் தங்கியிருந்து தொழில் புரியும் 26 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்.

ஆசைக்காகவே தான், வீடியோ எடுத்ததாக தெரிவிக்கும் அவர், லிந்துலையை வசிப்பிடமாகக் கொண்டவர் என்றும், வெள்ளவத்தையில் தங்கியிருந்து லொறி சாரதியாக கடமையாற்றுகின்றார் என்றும் விசாரணைகளில் ஊடாக தெரியவந்துள்ளது.

அவர் தொடர்பில் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் மற்றும் இரகசிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இரத்தினபுரிக்கு சென்று ஹெலிகொப்டரில் திரும்பியமை குறிப்பிடத்தக்கதாகும்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 23

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 24

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 19

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 13