2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ஹக்கீமை தொடர்பு கொண்ட இராஜதந்திரிகள்

Editorial   / 2020 ஏப்ரல் 23 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் இரு வெளிநாட்டு இராஜதந்திரிகள் தனித்தனியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு கலந்துரையாடியுள்ளனர்.

அமெரிக்கத் தூதுவர் அலய்னா பி. டெப்லிட்ஸ், பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சரா ஹுல்டன் ஆகியோரே ஹக்கீமுடன் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளனர்.

நாட்டின் தற்போதைய சமூக,  அரசியல் சூழ்நிலை, சிறுபான்மையினர் எதிர் நோக்கும் பிரச்சினைகள், கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்பாகவும், சட்டத்தின் ஆட்சி உரிய முறையில் நிலைநாட்டப்பட வேண்டியதன் அவசியம், பல்லின மக்கள் வாழும் நாட்டில் ஜனநாயக விழுமியங்களைப் பேணுவதில் ஏனைய நாடுகளிலிருந்து பகிர்ந்து கொள்ள வேண்டிய அனுபவம் என்பன பற்றியும் கலந்துரையாடப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X