Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 செப்டெம்பர் 16 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு, புறக்கோட்டையில் உள்ள ஒரு ஹோட்டல் கழிப்பறையில் உள்ள குப்பைத் தொட்டியில் இருந்து 17 தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டதாக புறக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
கழிப்பறையை சுத்தம் செய்யச் சென்றபோது குப்பைத் தொட்டியில் துப்பாக்கி தோட்டாக்கள் இருப்பதைக் கண்ட ஊழியர்கள் இது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அதற்கமைய செயற்பட்ட பொலிஸார் குறித்த இடத்திற்கு சென்று தோட்டாக்களை கைப்பற்றியுள்ளதுடன் இது தொடர்பான பரிசோதனையில் 9MM வகை தோட்டாக்கள் என கண்டறியப்பட்டுள்ளது. யாரோ ஒருவர் கழிப்பறைக்குள் நுழைந்து குப்பைத் தொட்டியில் தோட்டாக்களை கொட்டியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புறக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .