2024 மே 03, வெள்ளிக்கிழமை

ஹிருணிகா எம்.பிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Editorial   / 2019 ஜூலை 15 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இளைஞரொருவரைக் கடத்திச் சென்று தாக்கியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவுக்கு எதிராக, சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீதான விசாரணை டிசெம்பர் மாதம் 3ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மேல்நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்தி முன்னிலையில், இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதற்கமைய, டிசெம்பர் மாதம் 3ஆம் திகதி இந்த வழக்கை  விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதி அறிவித்தார்.

2016ஆம் ஆண்டு, தெமட்டகொட பிரதேசத்தில் வர்த்தக நிலைமொன்றில் கடமையாற்றிய இளைஞரொருவ​ர் கடத்திச் செல்லப்பட்டு, தாக்கப்பட்டமைத் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா உள்ளிட்ட 9 பேருக்கு எதிராக, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் பிரதிவாதிகளான 8 பேரும் தமக்கு எதிரான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதால், மேல்நீதிமன்றம் ஊடாக அவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஹிருணிகாவுக்கு எதிராக மாத்திரம் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .