2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ஹோட்டன் சமவௌியில் ட்ரோன் கமராவைப் பயன்படுத்திய வைத்தியர் கைது

Editorial   / 2019 ஜனவரி 03 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹோட்டன் சமவௌி தேசிய வனப் பகுதிக்குள் ட்ரோன் கமராவைப் பயன்படுத்தி புகைப்படங்களை எடுத்த வைத்தியரும் மற்றுமொரு நபரும் கைதுசெய்யப்பட்டு நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதனையடுத்து முதலாவது சந்தேகநபரிடம் 1500 ரூபாய் அபராதமும் 2000 ரூபாய்  அரசாங்கக் கட்டணத்தையும் செலுத்துமாறு நீதவான் பிரமோத் ஜயசேகர உத்தரவிட்டுள்ளார்.

இரண்டாவது சந்தேகநபரை 40,000 ரூபாய் அபராதத் தொகையைச் செலுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் சந்தேகநபர்களிடமிருந்த ​ட்ரோன் கமரா, அலைபேசி மற்றும் சிம் அட்டை என்பவற்றை அரசுடமையாக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வன விலங்குகளை இம்சிக்கும் வகையில் செயற்பட்டமை மற்றும் வனஜீவராசிகள் அதிகாரிகளின் கடமைகளுக்கு தடையேற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .