Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஜூலை 31 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை ஆவடி காமராஜர் மெயின் ரோட்டில் வசித்து வரும் 47 வயது தொழில் அதிபர். இவர் கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள ஓட்டலுக்கு சென்று அங்குள்ள பாரில் மது அருந்தி உள்ளார். அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த காதலியான இளம்பெண்ணும் மதுகுடித்துள்ளார்.
போதை தலைக்கு ஏறிய நிலையில் இருவரும் அதே ஓட்டலில் அறை எடுத்து தங்கி இரவு முழுவதும் உல்லாசமாக இருந்துள்ளனர். மறுநாள் காலையில் கண்விழித்து பார்த்தபோது தனது அருகில் தூங்கிக்கொண்டிருந்த இளம்பெண் காணாமல் போயிருந்தார். தொழில் அதிபர் கழுத்தில் அணிருந்திருந்த 10 பவுன் நகையும் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தொழில் அதிபருடன் உல்லாசமாக இருந்த இளம்பெண் அவரது செயினை திருடி கொண்டு ஓட்டலில் இருந்து தப்பி சென்றிருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தேனாம்பேட்டை போலீசில் தொழில் அதிபர் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 பவுன் நகையுடன் தப்பி ஓடிய கில்லாடி பெண்ணை தேடி வருகிறார்கள். தலைமறைவான பெண் தொழில் அதிபரின் காதலி ஆவார்.
இருவரும் இது போன்று அடிக்கடி வெளியில் தங்கி உல்லாசமாக இருப்பது வழக்கமாம். அதுபோன்று தான் கோடம்பாக்த்திலும் ஓட்டலில் நன்றாக மது குடித்துவிட்டு அறை எடுத்து தங்கி உல்லாசமாக இருந்துள்ளனர்.
இதனை பயன்படுத்தியே தொழில் அதிபரின் காதலி அவரிடம் இருந்து 10 பவுன் நகையை நைசாக திருடிக்கொண்டு தப்பி உள்ளார். நகையுடன் தப்பி சென்ற இளம்பெண் தீபிகா (வயது 28) என தொழில் அதிபர் தெரிவித்து இருக்கிறார். இதன்பேரில் அவரை கைது செய்தவற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago