2025 மே 07, புதன்கிழமை

கிழக்கு மாகாண முகாமைத்துவ உதவியாளர் ஆட்சேர்ப்பு பரீட்சை செப்டம்பர் 24ஆம் திகதி

Super User   / 2011 செப்டெம்பர் 10 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிழக்கு மாகாண முகாமைத்துவ உதவியாளர் சேவையில் வகுப்பு – III இற்கு ஆட்சேர்ப்பு
செய்வதற்கான திறந்த போட்டி பரீட்சை - 2011 எதிர்வரும் செப்டம்பர் 24ஆம் திகதி சனிக்கிழமை  நடைபெறவுள்ளது.

இதற்கான அனுமதி அட்டைகள் பரீட்சார்த்திகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண பொது சேவை ஆணைக்குழு செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ.திஸாநயக்க தெரிவித்தார்.

இதனடிப்படையில் 24ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணி தொடக்கம் 11.00 மணி வரை மொழி திறன் பரீட்சையும் காலை 11.30 மணி தொடக்கம் 12.30 மணி வரை உளச்சார்பு பரீட்சையும் இடம்பெறவுள்ளன.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X