2025 மே 03, சனிக்கிழமை

திருமலையில் செவ்வாய் காலை முதல் 30 மணித்தியாலம் நீர் விநியோகம் துண்டிக்கப்படும்

Super User   / 2012 ஜூலை 21 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                               (எம்.பரீட்)

மாவட்டத்தில் ' கந்தளாய் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய புனரைமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் எதிர்வரும் 24 ஆம் திகதி செவ்வாய் காலை 5.00 மணி 25 முற்பகல் 11.00 மணி வரை 30 மணித்தியாலயங்கள்  நீர் விநியோகம் இடை நிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவு, தம்பலகாமம் பிரதேச செலயாளர் பிரிவு, திருகோணமலை பட்டினமும், சூழலும் பிரதேச செயலாளர் பிரிவு, கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவு, குச்சவெளிப் பிரதேச செயலாளர் பிரிவு ஆகிய பிரிவுகளில் நீர் விநியோகம் தடை பட்டிருக்கும் எனவும் வடிகாலமைப்பு சபையினர் தெரிவித்துள்ளனர்.

நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதால் அசௌகரியங்களைத் தவிப்பதற்காக தேவையான அளவு நீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக் கொள்ளுமாறு பாவனையாளர்கள்  கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X