2025 மே 15, வியாழக்கிழமை

தம்பலகாமத்தில் 1191 பேர் இடம்பெயர்வு

Kogilavani   / 2011 ஜனவரி 10 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)
கந்தளாய் குளத்தின் நீர் இன்று திங்கட்கிழமை வெளியேற்றப்பட்டமையால் இப்பிரதேசத்தில்   வெள்ளம் அதிகரித்து காணப்படுகின்றது.  இதனால் தம்பலகாமம் பிரதேசத்தில் இருந்து 282 குடும்பங்களைச் சேர்ந்த 1191 பேர் இடம்பெயர்ந்து 7 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  

இதேவேளை கிண்ணியாவில், ஆலங்கேணியை அடுத்துள்ள  ஈச்சந்தீவு கிராமம் வெள்ளத்தில் மூழ்கும் நிலைதோன்றியுள்ளது. இக்கிராமத்தை சுற்றி ஆறு பாய்வதுடன் அதன் நீர் மட்டமும் அதிகரித்து வருகின்றது. அச்சம் காரணமாக இக்கிராம மக்கள் வீடுகளில் இருந்த வெளியேறி விபுலாநந்தா வித்தியாலயத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .