2025 மே 07, புதன்கிழமை

புல்மோட்டை பொலிஸ் பிரிவு 15 வருடங்களின் பின் திருமலை பொலிஸ் நிர்வாகப் பிரிவுடன் இணைப்பு

Super User   / 2011 ஒக்டோபர் 10 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரமன்)

திருகோணமலை மாவட்டத்திலுள்ள  புல்மோட்டை பொலிஸ் பிரிவு இன்று 15 வருடங்களுக்குபின் மீண்டும் திருகோணமலை  மாவட்ட பொலிஸ் நிர்வாகப் பிரிவுடன் இணைக்கப்பட்டது.
 
கடந்த 15 வருடங்களாக  புல்மோட்டை பொலிஸ் நிர்வாகப் பிரிவு அநுராதபுரம் பொலிஸ் நிர்வாகத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பொதுமக்கள்இ நாடாளுளுமன்ற பிரதிநிதிகள் பொதுநிறுவனங்கள் பல தொடர்ச்சியாக விடுத்த வேண்டுகோளை அடுத்து இன்று முதல் திருகோணமலையுடன் புல்மோட்டை பிரிவு இணைக்கப்பட்டது.
 
இன்று காலை புல்மோட்டை பிரதான பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அநுராதபுர மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நந்தன விஜயரெட்ண உத்தியோகரீதியில் திருகோணமலை பொலிஸ் பிரிவின்  பொலிஸ் அத்தியட்சகர் ரத்மல்வின்ன பண்டாரவிடம் புல்மோட்டை பொலிஸ் பிரிவின் பொறுப்புக்களை கையளித்தார்.

 மீண்டும் புல்மோட்டை பொலிஸ் பிரிவின் நிர்வாகம் திருகோணமலைக்கு மாற்றப்பட்டமை தமக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக பிரதேச மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X