2025 மே 08, வியாழக்கிழமை

கிழக்கிற்கு ரூ.16,767,256 மில்லியன் கிடைக்கும்: முதலமைச்சர் நம்பிக்கை

Super User   / 2012 நவம்பர் 06 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)

கிழக்கு மாகாண சபைக்கு 2013ஆம் ஆண்டுக்கான நிதியாக மத்திய அரசாங்கத்திடமிருந்து 16,767,256 மில்லியன் ரூபாய் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று காலை தவிசாளர் ஆரியவதி கலப்பதி தலைமையில் இடம்பெற்றது.  இதன்போது 2013 ஆம் ஆண்டுக்கான நிதிப் பிரகடனத்தினை முதலமைச்சர் நஜீப் - சபையில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்ளூ

'2013 ஆம் நிதியாண்டுக்கு எமது மாகாணசபை செலவினங்களுக்காக நிதி ஆணைக்குழுவினால் தேசிய வரவு செலவுத் திட்ட திணைக்களத்துக்கு சிபாரிசு செய்யப்பட்ட ஒதுக்கீடு தொகைகளை நான் இங்கு குறிப்பிடுகின்றேன்.

மீண்டு வரும் செலவீனங்களுக்காக 11,635,256 மில்லியனும், மூலதன செலவீனங்களுக்காக 1,21,700 மில்லியன் ரூபாவும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் செயற்றிட்டங்களுக்காக 3,915,00 மில்லியன் ரூபா சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில், மத்திய அரசிடமிருந்து கிழக்கு மாகாணசபைக்கு 16,767,256 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது' என்றார்.

மேற்படி நிதிப் பிரகடனத்தை கிழக்கு மாகாண அமைச்சர் விமலவீர திஸாநாயக்க முன்மொழிய, அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை வழிமொழிந்தார். இப்பிரேரணையை சபை ஏகமனதாக அங்கீகரித்தது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X