Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2011 மே 26 , மு.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எப்.முபாரக்)
இவ்வாண்டு கந்தளாய் பிரதேசத்தில் 22 ஆயிரம் ஏக்கர் காணியில் மாத்திரமே சிறுபோக நெற்செய்கையை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நேற்று கந்தளாய் அக்கிரபோதி தேசிய பாடசாலையில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபபெற்ற விவசாய சம்மேளனங்களின் கூட்டத்திலே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
கந்தளாய் குளத்தில் 114,583 ஏக்கர் அடி நீரும், வெண்டரசபுர குளத்தில் 17,810 அடி ஏக்கர் நீரும், வான்எல குளத்தில் 2,180 அடி ஏக்கர் நீரும் இருப்பதாக இக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந் நீரின் அளவினை வைத்தே மேற்படி சிறுபோகத்திற்கான நெற் செய்கைக்கான காணி வரையரை செய்யப்பட்டுள்ளது.
3 தொடக்கம் 3 1/2 மாதங்களில் அறுவடை செய்யக்கூடிய நெல்லினங்களையே செய்கை பண்ண வேண்டும் எனவும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதிக்கு முன்னர் விதைப்பு நடவடிக்கை அனைத்தும் பூர்த்தி அடைய வேண்டும் எனவும் இந்தக் கூட்டத்தில் மேலும் தீர்மானிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
29 minute ago
35 minute ago
46 minute ago