2025 மே 08, வியாழக்கிழமை

கிண்ணியாவில் மர்ம மனிதர்களின் நடமாட்டத்தினால் கைகலப்பு; 24 பேர் கைது

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 15 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அமதோரு அமரஜீவா)

கிண்ணியாவில் மர்ம மனிதர்களின் நடமாட்டத்தினால் பொதுமக்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கிண்ணியா பிரதேச செயலகத்தை  தற்போது பொதுமக்கள் முற்றுகையிட்டுள்ளனர். இந்தக் கைது நடவடிக்கை இன்று திங்கட்கிழமை காலையில் இடம்பெற்றுள்ளது.

இன்றையதினம் நடைபெறவுள்ள க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் 5 பேர் உட்பட 24 பேர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியே பொதுமக்கள்  கிண்ணியா பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட வண்ணமுள்ளனர்.

கிண்ணியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை  மற்றும் இன்று திங்கட்கிழமை அதிகாலை வேளையில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் காரணமாக  பொதுமக்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டதாகவும் இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றது.  

இந்த நிலையில், பிரதேச   செயலகத்திலுள்ள அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் வீ.ஆர்.டி.சில்வா மற்றும் கிழக்கு மாகாண இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா ஆகியோர் உட்பட அங்குள்ள அலுவலர்கள் வெளியேறமுடியாதவாறுள்ளனர். 


You May Also Like

  Comments - 0

  • aathilahamed Monday, 15 August 2011 04:18 PM

    அரசியல் வாழ்கைக்கு இந்த மாணவர்களுடைய வாழ்க்கையை பாதிக்கலாமா?

    Reply : 0       0

    deenmohamed Monday, 15 August 2011 05:08 PM

    இவங்கள மறிச்சி என்ன பிரயோசனம் எல்லாரையும் அல்லாஹ் தான் காப்பற்ற வேண்டும்

    Reply : 0       0

    SURESH Monday, 15 August 2011 06:00 PM

    மர்மமாகவே உள்ளது

    Reply : 0       0

    hari Monday, 15 August 2011 06:51 PM

    பரீட்சைக்குப் படித்த மாணவர்கள் என்ன செய்தார்களாம்? என்னப்பா இந்த நாட்டில் நடக்கிறது?

    Reply : 0       0

    AJ Monday, 15 August 2011 07:39 PM

    இவை அனைத்தும் லங்கா அரசாங்கத்தின் நடவடிக்கை.
    அவசரகால சட்டத்தை நீடிக்க இந்த வேலை என்றும் செய்தி இருக்கிறது.

    Reply : 0       0

    இறைவிசுவாசி Tuesday, 16 August 2011 01:13 AM

    முஸ்லிம்களின் புனித மாதத்தில் கட்டவிழ்த்துவிட்டுள்ள அராஜகத்தினால் முஸ்லிம்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுவிட்டது மட்டுமன்றி புனித ரமழானை உயிரப்பிக்க வேண்டிய எத்தனையோ முஸ்லிமகள் இரவு வேளைகளில் பள்ளிவாசல்களுக்குக்கூட செல்ல முடியாது வீடுகளில் முடங்கிங்கிடக்கின்றனர். இன்சா அல்லாஹ் அல்லாஹ்வின் விடயத்தில் கைவைத்தவர்களை அவனே பார்த்துக் கொள்வான். துஆச் செய்யுங்கள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X