2025 மே 08, வியாழக்கிழமை

கிண்ணியாவில் மழையால் 35 குடும்பங்கள் இடம்பெயர்வு

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 31 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீத்)


கிண்ணியாவில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையைத் தொடர்ந்து சுமார் 35 குடும்பங்கள் இடம்பெயர்ந்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளதுடன், சுமார் 300 குடும்பங்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையால் கிண்ணியாவின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. கிண்ணியா – தம்பலகமம், சூரங்கல் - ஆயிலியடி போன்ற வீதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் அவ்வீதிகளுடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன.

றஹ்மானியா நகர், பெரியாற்றுமுனை, எகுத்தார்நகர், சூரங்கல், ஆயிலியடி போன்ற கிராம உத்திண்க்கத்தர் பிரிவுகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு வீடு முழுமையாகவும்  6 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை பாதிக்கப்பட்ட இடங்களைச்; சென்று பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரண உதவிகளை வழங்குவதற்கும் அவர் பணித்துள்ளார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X