2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

தென்னமரவடி கிராhமத்தில் 200 தமிழ் வாக்காளர்களுக்கு தேசிய அடையாள அட்டை இல்லை

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 06 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சி.குருநாதன்)

1984 ஆம் ஆண்டு வன்செயல்களின் போது இடம்பெயர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை என்ற இடத்தில் வாழ்ந்து வருகின்ற தென்னமரவடித் தமிழ்க்கிராமத்தைச்சேர்நத தமிழ் மக்களில் ஒரு தொகுதியினர் மீண்டும் தென்னமரவடிக் கிராமத்திற்கு திரும்பி வந்து வாழ்கின்றனர்.  அவர்களில் 200க்கும் அதிகமானோருக்கு தேசிய அடையாள அட்டை  இல்லை என்பது தெரியவந்துள்ளதாக திருகோணமலை மாவட்டத்திலிருந்து தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வேட்பாளராக கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடும் பல்கலைக்கழக மாணவன் ஜெ.ஜெனார்த்தனன் தெரிவித்தார்.

ஜெனார்த்தனின் தலைமையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை தென்னமரவாடிக் கிராமத்திற்கு சென்ற பல்கலைக்கழக மாணவர்கள் குழு ஒன்று அங்கு வாழுகின்ற மீளக்குடியமர்ந்த மக்கள் மத்தியில் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டது.

அப்போதே 200க்கு அதிமானவர்களுக்கு தேசிய அடையாள அட்டை இல்லாத விடயம் வெளியாகிற்று என்று வேட்பாளர் ஜெனார்த்தனன் தெரிவித்தார்.

அதனையடுத்து தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு தென்னமரவடி கிராமசேவையளர் ஊடாக தற்காலிக அடையாள அட்டை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை தான் மேற்கொள்வதாக அம்மக்களுக்கு ஜெனார்த்தனன் உறுதியளித்தார்.

நடக்கவிருக்கும் கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் தென்னமரவடிக்கிராம மக்கள் அனைவரும் தவறாது தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற உதவ வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

முள்ளியவளையில் தங்கியிருக்கும் தென்னமரவடி வாக்காளர்களுக்கும் மீளக்குடியமர்ந்துள்ள மக்களுக்காகவும் தென்னமரவடிக் கிராமத்தில் ஒரே ஒரு வாக்களிப்பு நிலையமே அமைக்கப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X