Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜனவரி 07 , மு.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
(முறாசில்)
மூதூர் - திருமலை கடல்வழிப் பயணிகள் போக்குவரத்தில் 'சேருவில-II' என்னும் கப்பல் நீண்ட காலத்தின் பின்னர் மீண்டும் தனது சேவையை ஆரம்பித்துள்ளது.
இயந்திரக்கோளாறு காரணமாக பல மாதங்களாக சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த இக்கப்பல்,
இன்று காலை 8.15 மணியளவில் திருமலையிலிருந்து பயணத்தை ஆரம்பித்து காலை 9.15 மணியளவில் மூதூர் இறங்கு துறையை வந்தடைந்தது.
சுமார் 200 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய இக்கப்பல,; நாளாந்தம் திருமலையிலிருந்து இரு தடவைகள் மூதூருக்கும் மூதூரிலிருந்து இரு தடவைகள் திருமலைக்கும் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடவுள்ளது.
இக்கப்பலில் பயணிக்கும் ஒருவருக்கு ஒருவழிக் கட்டணமாக 140 ரூபாய் அறவிடப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago