Niroshini / 2016 ஜனவரி 14 , மு.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு அநிதி இழைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து கிழக்கில் உள்ள பட்டதாரிகளையும் இணைத்துக் கொண்டு அகிம்சைப் போராட்டத்தில் இறங்கவுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான ஜே.எம்.லாஹிர் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை(12) பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவி கொழும்பு அலரி மாளிகையில் வைத்து வழங்கப்பட்ட நியமனமானது கொழுப்பை மையப்படுத்தியே வழங்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் வெற்றிடங்கள் இருக்கின்ற நிலையில் ஒருவர் கூட கிழக்கில் நியமனம் செய்யப்படவில்லை. இதனை ஆட்சோபித்து கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸிரிடம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹிர், கிழக்கு மாகாண பட்டதாரிகளை அம்மாகாணத்தில் மீள்நியமனம் செய்யப்பட வேண்டும் என்றும் இல்லையேல் அனைத்து பட்டதாரிகளையும் இணைத்து அகிம்சை வழியில் தான் முழுமையாக போராட்டங்களை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, கிழக்கு மாகாண முதலமைச்சர் கூடிய விரைவில் ஜனாதிபதியைச் சந்தித்து இது தொடர்பில் உடன்நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் வாக்குரிதியளித்தார்.
15 minute ago
25 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
25 minute ago
1 hours ago