Suganthini Ratnam / 2015 நவம்பர் 24 , மு.ப. 07:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் மக்களுக்குச் செய்யும் சேவையை முடக்கும் செயலாகவே அவர்களின் பொலிஸ் பாதுகாப்பு அகற்றப்பட்டுள்ளதை பார்க்க வேண்டியுள்ளதென மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.
எனவே, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கு நீக்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பை மீள வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கிழக்கு மாகாண சபையே இந்த நடவடிக்கையை உடனடியதாக முன்னெடுக்க வேண்டுமெனவும் அவர் கூறினார்.
கிழக்கு மாகாண சபையின் அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோது, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களின் பொலிஸ் பாதுகாப்பு நீக்கப்பட்டமை தொடர்பில் அவசர பிரேரணையை முன்வைத்து உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் பாதுகாப்பு எந்தவித முன் அறிவித்தலுமின்றி நீக்கப்பட்டுள்ளது. இந்தச் செயற்பாடானது கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களை பாரிய அசௌகரியத்துக்கு உள்ளாக்கியுள்ளதுடன், மக்கள் பணிகளை நிறைவேற்றும் விடயத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டுள்ளது' என்றார்.
'நாட்டில் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்ட பின்னரான இன்றைய காலகட்டத்தில் ஆங்காங்கே கொலைச் சம்பவங்களும் கடத்தல் சம்பவங்களும் இடம்பெற்ற வண்ணமுள்ளன. மேலும், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கு அவர்களின் பாதுகாப்பு ஏற்கெனவே நீக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் கூட அவர்களின் வீடுகள், அலுவலகங்கள் தாக்குதலுக்குள்ளான சம்பவங்களையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்' எனவும் அவர் தெரிவித்தார்.
16 minute ago
36 minute ago
44 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
36 minute ago
44 minute ago
1 hours ago