2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

‘கணிதத்தில் சித்திடையவில்லை’

Princiya Dixci   / 2017 மே 14 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்

“கடந்த வருடம்  நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேற்றிய  கிண்ணியா கல்வி வலயம், கிழக்கு மாகாணத்தில்  உள்ள 17 கல்வி வலயங்களிலும் கடைசி நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது சமூகம் ஏற்றுக் கொள்ள முடியாத  துர்ப்பாக்கிய நிலையாகும்.

இதற்கு குறிப்பிட்ட ஒரு சாராரை மட்டும் குறை கூறிவிட்டு எவரும் தப்பிக்க முடியாது. கல்விப் பின்புலத்தில் உள்ள அவைரும் பொறுப்புதாரிகளே” என, கிண்ணியா வலயக் கல்வி அலுவலக கணித பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் ஐ. ஹசன் தெரிவித்தார்.

“கணித பாடத்தில் 1,366 மாணவர்கள் தோற்றி, 910 மாணவர்கள் சித்தியடையவில்லை.

“இந்த  வீழ்ச்சியானது எதிர் காலத்தில் எமது சமூகத்தின் உயர் கல்வியில் மிகப் பெரிய தாக்கத்தைச் செலுத்தும். எனவே, இது சம்மந்தமாக வினைத் திறனுள்ள கல்வி நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது  சம்மந்தப்பட்டவர்களின் தார்மீகப் பொறுபாகும்.” என அவர் மேலும் தெரவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .