Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ், வடிவேல் சக்திவேல்
'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக உள்ளபோதிலும், அரசாங்கத்தின் நல்ல செயற்றிட்டங்களுக்கு நாங்கள் ஆதரவு தெரிவிப்போம். தெரிவித்துமுள்ளோம். அந்த வகையில் கிழக்கு மாகாணத்திலும் நாங்கள் ஆட்சியை அமைத்துள்ளோம்;' இவ்வாறு கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
திருகோணமலை, மொறவௌ மகாதிவுல்வௌவில் செவ்வாய்க்கிழமை (01) நடைபெற்ற மீனவர் சங்கக் கட்டடத்; திறப்பு விழாவின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், 'தேசிய அரசாங்கமொன்றை மத்தியில் ஆரம்பிப்பதற்கு முன்பே கிழக்கு மாகாணசபை உருவானது. இந்த விடயம் பேச்சுக்கு பெரும் இனிப்பாக இருந்தாலும், இதை செயல் வடிவில் கொண்டுவருவதே இனிப்பான விடயம். அந்த வகையில் நாங்கள் இதனை செயல் வடிவில் கொண்டுவருவதற்காக மூவினங்களும் செயலாற்ற வேண்டுமென்ற விதத்தில் அக்கறையுள்ளவர்களாக இருக்கிறோம்' என்றார்.
இந்நாட்டுக்கு சமஷ்டி ஆட்சியே சரியாதென பண்டாரநாயக்கா ஏற்றுக்கொண்டவர். இந்நாட்டில் வடக்கு, கிழக்கு ஒரு தனித்துவமான இயல்பு கொண்ட பிரிவாகவும் நாட்டின் ஏனைய பகுதிகளை நான்காகப் பிரித்து ஐந்து பகுதிகளாக இந்நாட்டை நிர்வகிப்பதே நாட்டின் ஒற்றுமைக்கு வழிகோலுமென்று பண்டாரநாயக்கா கூறினார். இதனை எமது தமிழ்த் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், அதன் பின்னர் வந்த காலப்பகுதியில் அவரும் ஆட்சியைப் பிடித்துக்கொள்வதற்காக அந்தக் கொள்கையை மாற்றிக் கொண்டார்' எனவும் அவர் தெரிவித்தார்.
23 minute ago
43 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
43 minute ago
51 minute ago
1 hours ago