Niroshini / 2015 டிசெம்பர் 03 , மு.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.என்.எம்.புஹாரி
நெற்பயிர் விவசாயிகளுக்கு உற்பத்தி திறனை அதிகரிக்கும் ஏ.எச்.ஏ-2 முன்மாதிரி செயற்திட்டம் தோப்பூர் விவசாய போதனாசிரியர் பிரிவிலுள்ள பாலத்தோப்பூர் கிராமத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.
இதன் ஒருகட்டமாக நெல்நாற்றுக்களை இயந்திரம் மூலம் நடுகை செய்யும் நிகழ்வு தோப்பூர் விவசாய போதனாசிரியர் ஏ.எம்.எம்.மன்சூர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், பிரதம அதிதியாக திருகோணமலை பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.குகநாதன்,மூதூர் பிரதேசத்துக்கு பொறுப்பான உத்தியோகத்தர் எம்.எச்.ஆசாத்,மூதூர் வலய விவசாய போதனாசிரியர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது, ஏ.எச்.ஏ-2 நெல் உற்பத்தி திறனை அதிகரிக்கும் செயற்திட்டம் சம்மந்தமாகவும் இயந்திரம் மூலம் நாற்று நடுவதால் ஏற்படும் நன்மை தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த திருகோணமலை மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் எம்.குகநாதன்,
இயந்திரம் மூலம் நாற்றுக்களை நடுவதால் குறைந்த நெல் பயன்பாடு,வேலையாள் செலவு குறைவு,நோய் தாக்கங்கள் குறைவு,களைகளை இலகுவாக கட்டுப்படுத்தல் போன்ற நன்மைகள் விவசாயிகளுக்கு கிடைப்பதோடு இயந்திரம் மூலம் நாற்று நடுவதால் ஒரு குறைந்த நிலப்பரப்புக்குள் கூடிய விளைச்சளை பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.
மேலும், இந்த புதிய நடுகைக்கு மாட்டெரு,கூட்டெரு,கிளிசீரியா இலைகள் போன்றன பசளைக்காக பயன்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
23 minute ago
43 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
43 minute ago
51 minute ago
1 hours ago