2025 மே 15, வியாழக்கிழமை

'பத்திரிகைகள் ஊடாக மன்னிப்புக் கோரவும்'

Princiya Dixci   / 2017 மே 10 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

தினசரிப் பத்திரிகைகளின் முன் பக்கத்தில் மன்னிப்புச் செய்தியை வெளியிட்டு, பொதுமக்களிடம் மன்னிப்புக் கோருமாறு, கிண்ணியா பகுதியைச் சேர்ந்த மருந்தக (பாமசி) உரிமையாளர் ஒருவருக்கு, திருகோணமலை நீதிமன்றம், கட்டளை பிறப்பித்துள்ளது.

தேசிய மருந்துகள் ஒழுங்கு படுத்தும் அதிகார சபையின் திருகோணமலை பிராந்திய உணவு மற்றும் மருந்துப் பரிசோதகர்களினால், மருந்தகங்கள் சுற்றிவளைக்கப்பட்ட போது, குற்றங்களுக்கு இலக்கான மேற்படி மருந்த உரிமையாளருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, செவ்வாய்க்கிழமை (09) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, திருகோணமலை பிரதம நீதவான் இக்கட்டளையைப் பிறப்பித்தார்.

அதிகார சபையின் உரிமம் பெறாமல் மருந்தகத்தை நடத்தியமை, மருந்தாளர் அல்லாதவரினால் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டமை, காலாவதியான மருந்துகள் விற்பனை செய்தமை மற்றும் வெளிக்காட்டி வைத்திருந்தமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழேயே, மேற்படி மருந்தக உரிமையாளருக்கு எதிராக, வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இவ்வாறான தவறுகள் இனிமேலும் நடைபெறாமல் இருப்பதற்காக, தினசரிப் பத்திரிகை மூன்றின் முன்பக்கங்களில், மன்னிப்புச் செய்தியை வெளியிட்டு,  பொதுமன்னிப்பு கேட்க வேண்டுமெனவும் அப்பத்திரிகைகளின் பிரதிகளை, நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டுமெனவும், நீதவான் கட்டளை பிறப்பித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .