Niroshini / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பலமிக்க ஒரு கோட்டையாக மூதூர் தேர்தல் தொகுதி காணப்படுகின்றது.இப்பிரதேசத்தினை அனைத்து வளங்களும் நிறைந்ததாக மாற்றியமைப்பது கிழக்கு மாகாண முதலமைச்சரான என்னையே சாரும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
கடந்த 2000ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது உயிரிழந்த இருபத்தைந்து குடும்பங்களுக்கு தையல் இயந்திரம், வாழ்வாதார உதவிகள் மற்றும் பாடசாலைகளுக்கு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை மாலையில் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான ஜேஎம்.லாஹிரின் தலைமையில் நடைபெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
மூதூர் தேர்தல் தொகுதியில் கடந்த தேர்தலின்போது, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மரணித்ததை நாம் ஒருபோதும் மறந்துவிடமாட்டோம்.கட்சிக்காக உயிர்நீத்ததை பெருமையாகவே நான் பார்க்கின்றேன்.
மூதூர் பகுதியில் பின்தங்கிய அனைத்து பகுதிகளையும் புனரமைக்கப்படுவதோடு, நீண்ட பிரச்சினையாக காணப்படும் அக்கரைச்சேனை வீதியும் புனரமைக்கப்படும்.
மூதூர் பிரதேசம் அரசியல் ரீதியாக எந்தவிதமான நன்மைகளும் இதுவரை அடையவில்லை.இதனை மாற்றியமைக்க வேண்டும்.கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம்.லாஹிரின் அனுசரணையுடன் அனைத்து வீதிகளும் பாலங்களும் சீர்செய்யப்படும்.
அத்தோடு மூதூர் கடலோர பகுதிகளுக்கும் கல் வேலி அமைக்கும் பணிகளும் கூடிய விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றார்.


16 minute ago
36 minute ago
44 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
36 minute ago
44 minute ago
1 hours ago