2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

62 முதிரை மரக்குற்றிகளுடன் கைதானவருக்கு விளக்கமறியல்

Thipaan   / 2016 செப்டெம்பர் 12 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா

திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், 62 முதிரை மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இரண்டு பேரில் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறும் மற்றைய நபரை ஒரு இலட்சம் ரூபாய் பெநுமதியான இரு சரீரப் பிணையில் செல்லுமாறும் திருகோணமலை நீதிமன்ற நீதவான், நேற்று (11) உத்தரவிட்டார்.

லொறியில் முதிரை மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற சாரதியான பாலையூற்று, முருகன் கோயில் வீதியைச் சேர்ந்த சுவேந்திரன் தியாகரன் (24 வயது) என்பவரே, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, மரக்குற்றிகளை லொறியில் ஏற்றிச்சென்ற சாரதிகளுக்கு முச்சக்கரவண்டியில் சென்று வீதியில் இடம் பெறும் சம்பவங்களை அலைபேசி மூலம் தெரியப்படுத்தி வந்த  பாலையூற்று பகுதியைச்சேர்ந்த சுயேந்திரன் சுபராஜா (25வயது) என்ற முச்சக்கரவண்டி சாரதியை பிணையில் செல்லுமாறும் நவம்பர் மாதம் 02ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டார்.

அத்துடன், பொலிஸார் சோதனைக்குட்படுத்துவதற்காக லொறியை நிறுத்தும் போது தப்பிச்சென்ற,  மற்றைய லொறியின் சாரதியை கைது செய்யுமாறும் பொலிஸாருக்குக்கு நீதவான் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X