Niroshini / 2015 நவம்பர் 29 , மு.ப. 07:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்
கிண்ணியா பிரதேசத்தில் நூற்றுக்கு 12 வீதமான குழந்தைகள் இள வயதுத் திருமணம் மூலம் பிறக்கின்றன.ஒரு மாதத்தில் சுமார் 160 குழந்தைகள் பிறக்கின்றன. அதில் 12 வீதம் இள வயதுக் கர்ப்பத்தின் மூலம் கிடைப்பதென்றால், ஒரு வருடத்தில் 216க்கும் மேற்பட்ட குழந்தைகள் இளவயது கர்ப்பத்தின் மூலம் பிறக்கின்றன. அப்படியானால் எதிர்காலத்தில் ஓர் ஆரோக்கியமான சமூகம் எவ்வாறு உருவாக முடியும் என கிண்ணியா மாவட்ட வைத்திய அதிகாரி ஏ.எச்.சமீம் தெரிவித்தார்.
கிண்ணியா மத்திய கல்லூரி மண்டபத்தில் நேற்று நடைபெற்ற 2015ஆம் ஆண்டுக்கான கிண்ணியா பிரதேசத்தின் கலை இலக்கிய பெருவிழாவில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கிண்ணியா பிரதேச உதவிச் செயலாளர் பீ.அஜிதா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இள வயது திருமணமும் இள வயது கர்ப்பமும் எமது நாடு இன்று எதிர் நோக்கியிருக்கின்ற முக்கியமான சுகாதாரப் பிரச்சினையாகும். இது சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவிக்கின்றன.
இள வயது திருமணம் குடும்பத்தில் பல்வேறு பொருளாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது. குடும்பத்தில் பிளவுகளை உருவாக்குகின்றது. நாட்டில் வாரந்தம் மத்தியஸ்த சபைக்கு வருகின்ற பிரச்சினைகளில் அரைவாசிக்கு மேற்பட்டவை திருமணம் முடித்த 25 வயதுக்குட்பட்டவர்களின் பிணக்குகள் என்பது தெரியவந்திருக்கின்றது.
இள வயதில் ஏற்படுகின்ற கர்ப்பம் காரணமாக அந்த குழந்தைகள் எதிர்காலமே இல்லாத குழந்தைகளாகவே பிறகின்றன.
கலாசாரம் என்பது இடத்துக்கிடம் பிரதேசத்துக்கு பிரதேசம் நாட்டுக்கு நாடு வித்தியாசமான முறையில் அமைந்திருப்பதனை காணலாம். ஒரு சிறிய கிராமம் கூட தனக்கென தனியான கலாசாரங்களை கொண்டிருப்பதை நாம் காணலாம்.
அந்தவகையில் கிண்ணியாவுக்கென உரித்தான சீனடி, சிலம்படி, வாள் வீச்சு போன்ற பாரம்பரிய கலாசார அடையாளங்கள் சமூகத்தில் இருந்து மறைந்து கொண்டிருப்பது வேதனையளிக்கின்து என்றார்.
இங்கு கிண்ணியா பிரதேச உதவிச் செயலாளர் பீ.அஜிதா இங்கு உரையாற்றுகையில்,
காலத்தின் கண்ணாடி என்று இலக்கியத்தைக் கூறுவார்கள்.கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள்,நாடகங்கள், குறுங்கதைகள், பெருங்கதைகள் என்பன ஒரு பிரதேசத்தின் விழும்பியங்களையும் கலாசாரங்களையும் எடுத்துக் கூறப்படுகின்றது.எனவே இலக்கியம் என்பது ஒரு சமூகத்தைச் செதுக்கும் ஒரு ஆயுதமாகும்.
நல்ல இலக்கியங்களை நமது பிரதசத்தில் புகுத்த வேண்டும். கிண்ணியா பிரதேசத்துக்கு என பாரம்பரிய விளையாட்டுக்களான சீனடி, வாள் வெட்டு போன்றன காணப்படுகின்றன. அவை மறைந்து விடாமல் பாதுகாக்க வேண்டியது இப்பிரதேச மக்களின் தலையாய பொறுப்பாகும்.
இலக்கியத்தின் மூலம் தடம்புரண்டு செல்கின்ற ஒரு சமூகத்தை நேர்வழிப்படுத்த முடியும். நல்ல இலக்கியங்களை சமூகத்தில் புகுத்துவதன் மூலம் இப்போது இருக்கின்ற சிறார்களை பாதுகாக்க முடியும்.
வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் மாணவர்கள் மத்தியில் பிரதேச இலக்கியம் தொடர்பான ஆற்றலையும் ஆர்வத்தையும் ஏற்படுத்த முடியும்.
இப் பிரதேசத்தில் ஆற்றலுள்ள இலக்கிய வித்துவான்கள் இருக்கின்றார்கள்.இதற்கிணங்க,இந்த வருடம் இப் பிரதேசத்தில் இருந்து கலாபூசண விருதுக்காக துல் அப்துல் கசன் என்பவரும் வித்தகர் விருதுக்காக முகம்மது சரிபு என்பவரும் கலாசாரத் திணைக்களத்தினால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
16 minute ago
36 minute ago
44 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
36 minute ago
44 minute ago
1 hours ago