Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2023 நவம்பர் 17 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
இரட்டை குழந்தைகளை பிரசவிக்க தயாராக இருந்த எட்டுமாத கர்ப்பிணித்தாயும், சிசு ஒன்றும் உயிரிழந்துள்ள சம்பவம் திருகோணமலை வைத்தியசாலையில் வௌ்ளிக்கிழமை (16) இடம்பெற்றுள்ளது.
மூதூர் இக்பால் வீதியைச் சேர்ந்த எம்.ஏ.பஸ்மினா (33வயது) இரட்டை குழந்தைகளை பிரசவிக்க தயாராக இருந்த எட்டுமாத இளம் கர்ப்பிணித்தாயாவார்.
மாதாந்த மகப்பேற்று பரிசோதனைக்காக திருகோணமலை தனியார் வைத்தியசாலை ஒன்றில் ஸ்கேன் பரிசோதனையை மேற்கொண்டபோது இரண்டு சிசுக்களில் ஒன்று உயிரிழந்துள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.
அந்த வைத்தியரின் பணிப்புரைக்கு அமைவாக குறித்த தாய் வைத்தியசாலைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டபோதிலும் உயர் குருதி அழுத்தம் காரணமாக வழியிலேயே மயக்கம் அடைந்துள்ளார்.
பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சத்திர சிகிச்சை மேற்கொண்டபோதிலும் குறித்த தாயும் உயிரிழந்தார். எனினும், சிசு ஒன்றை மட்டும் காப்பாறிய வைத்தியர்கள் அச்சிசுவை விசேட சிசு பராமரிப்புப்பிரிவில் வைத்துள்ளனர்.
தாய் மற்றும் சிசுவின் சடலங்கள் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
குறித்த மரணங்கள் தொடர்பில் மூதூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
24 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
2 hours ago
4 hours ago