2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கோணேஸ்வரர் ஆலய வழிபாட்டில் நிருபமா ராவ்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 01 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலைக்கு  இன்று புதன்கிழமை விஜயம் செய்த இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ், வரலாற்று பெருமைமிக்க திருகோணேஸ்வரம் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

அத்துடன், இந்திய அரசினால் அன்பளிப்பு செய்யப்பட்ட வாகனத்திற்கான ஆவணங்களை ஆலய பரிபாலன சபை செயலாளர் க.அருள்சுப்பிரமணியத்திடம் நிருபமா ராவ் கையளித்தார். இந்நிகழ்வில் ஆலய பரிபாலன சபை பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இவருடன் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் ரஞ்சித் சில்வா, கிழக்கு மாகாணசபை பிரதம செயலாளர் பொ.பாலசிங்கம், மேலதிக அரசாங்க அதிபர் ஆ.நடராசா ஆகியோரும் ஆலய வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இதேவேளை, கிழக்கு மாகாண முதலமைச்சர், கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோரை தனித்தனியாக அவர்களது அலுவலகத்தில் சந்தித்து நிருபமா ராவ் பேச்சுக்களை நடத்தினார்.

இச்சந்திப்பில், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தவும்  கலந்து கொண்டார்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .