Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2010 செப்டெம்பர் 05 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
திருகோணமலை நகரத்தில் உள்ள வீதிகளில் குப்பை போடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதனைக் கண்காணிக்க விசேட பொலிஸ் குழு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது எனவும் தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சரித்த ஏ.டி.ஜயசுந்தர தெரிவித்துள்ளார்
திருகோணமலை நகர வர்த்தகர்களையும், பிரமுகர்களையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து நடத்திய சந்திப்பின்போதே இக்கருத்தினை தெளிவுபடுத்தி உள்ளார்.
இதன்போது ஏகாம்பரம் வீதி, மத்திய வீதி, புரதான வீதி, மரத்தடி தொடக்கம் காளிகோயில் வரை, உட்துறைமுக வீதி மட்கோ சந்தி வரை உள்ள பகுதிகள் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு அவற்றினைக் கண்காணிக்க 10 பேர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இக்குழுக்கள் ஒவ்வொன்றையும் இணைந்ததாக திருகோணமலை நகர பொலிஸ் வீதி பாதுகாப்பு குழு எனும் அமைப்பும் தோற்றுவிக்கப்பட்டது. இதன் தலைவராக க.சோமசுந்தரம் தெரிவு செய்யப்பட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
58 minute ago
1 hours ago
2 hours ago