Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Super User / 2010 செப்டெம்பர் 14 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர்.அனுருத்தன்)
திருகோணமலை, சம்பூர் பிரதேச உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக தமது இருப்பிடங்களை இழந்துள்ள குடும்பங்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக சம்பூர் பிரதேச இடம் பெயர்ந்தோர் நலன் புரிச்சங்கம் ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி நீல் பூனேயிடம் இன்று நேரடியாக மகஜர் ஒன்றை கையளித்துள்ளது.
தற்போது கிழக்கு மாகாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி நீல் பூனே மற்றும் உதவி வழங்கும் அமைப்புகளின் பிரதிநிதிகள் கிளிவெட்டி இடைத் தங்கல் முகாமிற்கும், தோப்பூர் கிராமத்திற்கும் விஜயம் செய்தனர்.
இந்த விஜயத்தின் போது சம்பூர் பிரதேச இடம்பெயர்நதோர் நலன்புரிச் சங்கம் அவரிடம் கையளித்துள்ள மகஜரில்
"2006 ஏப்ரில் 26 ம் திகதி ஏற்பட்ட யுத்த சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்து இன்று வரை சம்பூர் , கூனித்தீவூ, சூடைக்குடா மற்றும் சமபுக்களி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 1300 குடும்பங்களைக் கொண்ட 6500 பேர் வாழ்ந்து வருகின்றார்கள்.
பூர்வீக கிராமங்களும் மக்களின் வாழ்வாதாரங்களும் வயல் நிலங்களும் உயர் பாதுகாப்பு வலயம், அனல் மின் உற்பத்தி திட்டம் என்ற போர்வையில் சுவீகரிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மீள்குடியேற்றம் மறுக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 5 வருடங்களாக தொடர்ந்தும் அகதி முகாம்களில் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது" என அம்மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடரும் தங்களது அவல வாழ்க்கையை முடிவிற்கு கொண்டு வர மீள் குடியேற்றத்திற்கு உதவுமாறு ஐ.நா.வின் வதிவிடப் பிரதிநிதியிடம் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
32 minute ago
1 hours ago