Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 05 , மு.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எல்.தேவ்)
திருகோணமலை, கிறேஸ் கெயார் நிலையத்தில் தையல் பயிற்சியில் ஈடுபட்டுவருபவர்களின் பயிற்சிகளை சிறந்த முறையில் மேற்கொள்வதற்காக மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் வி.முரளிதரன் கருணா அம்மான் பவுண்டேசனால் ஆறு தையல் இயந்திரங்களை வழங்கியுள்ளார்.
கடந்தகால யுத்தம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட முதயோர், சிறுவர்களைப் பராமரித்துவரும் நிலையத்தின் பணிப்பாளர் கிராம் லப்றோயிடம் பிரதி அமைச்சர் நேற்று திங்கட்கிழமை இத் தையல் இயந்திரங்களைக் கைளித்தார்.
2001ஆம் ஆண்டு முதல் கிறேஸ் கெயார் நிலையம் இயங்கி வருகிறது. இதில் இப்போது யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட 43 முதியவர்களும், வன்னி, யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு உள்ளிட்ட இடங்களைச் சேர்ந்த 45 பிள்ளைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையத்தின் பராமரிப்பில் க.பொ.த சாதாரண தரம், உயர்தரம் கற்று முடித்த 25 மாணவிகள் தையல் பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர்.
தையல் இயந்திரங்களை வழங்கிய அமைச்சர் முரளிதரன், இவை முதல் கட்டமாக வழங்கப்படுவதாகவும் மிக விரைவில் கணனிக் கல்வியைக் கற்று வருபவர்களுக்கு கணனிகளை வழங்கவுள்ளதாகவும் தொடர்ந்தும் பல்வேறு உதவிகளைச் செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மீள்குடியேற்ற அமைச்சின் இணைப்புச் செயலாளர் பொன்.ரவீந்திரன், மற்றும் கிறேஸ் கெயார் நிலையத்தின் உத்தியோகஸ்தர்கள், தையல் பயிற்சி பெற்றுவரும் நிலையத்தின் மானவிகள் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
7 hours ago