Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2010 நவம்பர் 11 , மு.ப. 08:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
(முறாசில்)
மூதூர் பிரதேச செயலக வளாகத்தில் இரு பிள்ளைகளின் தந்தையான ராசாத்தம்பி ஜெமீல் (வயது 47) என்பவர் திடீரென்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
'சாகும்வரை உண்ணாவிரதம்' என்று எழுதிய அட்டையொன்றை ஏந்தியவாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இவர், மூதூர் அரபா நகரிலிருந்து 1985ஆம் ஆண்டு அகதியாக்கப்பட்டதாகவும் இன்றுவரை தனக்கு புனர்வாழ்வுக்கான நடவடிக்கை எதுவும் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படவில்லையெனவும் தெரிவித்தார்.
இஸ்லாமிய சமயத்திற்கு முரணான காரியமாக இருந்தபோதிலும், தான் தொடராக எடுத்த எந்தவோர் முயற்சியும் பலனளிக்காத நிலையிலேயே இம்முடிவுக்கு வந்ததாகவும் அவர் கூறினார்.
அரபா நகர்க் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இன்றுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
2 hours ago
2 hours ago