2025 மே 15, வியாழக்கிழமை

திருமலை கல்வி பணிப்பாளராக கே.முருகுப்பிள்ளை நியமனம்

Menaka Mookandi   / 2011 ஜனவரி 05 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)

திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளராக கே.முருகுப்பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார்.  நேற்று 4ஆம் திகதியில் இருந்து இவர் தனது பணியைப் பொறுப்பேற்றுள்ளார்.

கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளராக 2009 இலிருந்து 2010 நடுப்பகுதி வரை சேவையாற்றிய இவர் பின்னர்  வலயக் கல்வித் திணைக்களத்தின் நிருவாகத்திற்கு பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளராக நியமனப்பெற்று பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் கடமையில் இருந்த வலயக் கல்விப் பணிப்பாளரான திருமதி.ஆனந்தராஜா ஓய்வுபெற்றதையடுத்து முருகுப்பிள்ளை இப்பதவிக்கு நியமிக்கப்படடுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .