Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Menaka Mookandi / 2011 ஜனவரி 06 , பி.ப. 01:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(முறாசில்)
மூதூர் பிரதான வீதி விஸ்தரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட அங்காடி வியாபரிகளுக்கு நிரந்தரமாக கடைகளை அமைத்துக் கொள்வதற்கான காணியைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையில் திருகோணமலை மாவட்டத்துக்கான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மூதூர் பிரதேச சபை தவிசாளருமான கே.எம்.தௌபீக் ஈடுபட்டுள்ளார்.
உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்படவுள்ள இவ்விறுதி நேரத்தில் தான் ஏலவே வியாபாரிகளுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலேயே இத்தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறும் தவிசாளர் மூதூர் மத்திய பஸ்தரிப்பு நிலையத்திற்கு அண்மித்த பகுயில் குறித்த காணிச் சொந்தக்காரர்களின் ஒத்துழைப்போடு சட்டபூர்வமாகவே கடைகள் அமைப்பதற்கான காணியை 100 பேருக்கு வழங்குவதற்கு ஒழுங்கு செய்துள்ளதாக தெரிவித்தார்.
நீண்;ட காலமாக மூதூர் பிரதான வீதியில் அங்காடி வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த வியாபாரிகள் அண்மையில் வீதி விஸ்தரிப்பு மேற்கொள்வதற்காக வேண்டி வெளியேற்றப்பட்ட நிலையில் தமது வியாபாரத்தை மேற்கொள்வதில் பெரும் சிரமத்திற்குள்ளாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
saali Saturday, 08 January 2011 06:04 AM
chairman.....தௌபீக் அவர்களே எப்போது நொக்ஸ் ரோடு அகலமாகும் .
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago