2025 மே 15, வியாழக்கிழமை

கிழக்கு மாகாண கல்வி திணைக்கள ஏற்பாட்டில் ஒளிவிழா

A.P.Mathan   / 2011 ஜனவரி 06 , பி.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

மத உணர்வுகளை அனுபவிக்க முடியாது இருந்த மக்கள் தற்போது அதனை நன்கு அனுபவித்து வருகின்றனர். அந்தளவுக்கு காலம் மாறி உள்ளது. கடவுள் ஒருவனாகத்தான் இருக்க முடியும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண கல்வி திணைக்களம் ஏற்பாடுசெய்த ஒளிவிழா இன்று வியாழக்கிழமை திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் நடைபெற்றது.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் உத்தியோக மொழியாக தமிழ் மொழியே இருக்கின்றது. தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு இங்கு தடை இல்லை என்றும் முதலமைச்சர் இவ்விழாவில் குறிப்பிட்டார்.

முதலமைச்சருக்கு கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் ஏ.ரி.எம்.நிசாம்- நினைவு பரிசு ஒன்றினையும் இந்நிகழ்வின்போது வழங்கி கௌரவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .