2025 மே 15, வியாழக்கிழமை

மழையால் குடியிருப்புக்களை நோக்கி நகரும் விஷப்பாம்புகள்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 10 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(முறாசில்)

தொடர் மழை காரணமாக மூதூர் பிரதேசத்தின் தாழ்நிலக் குடியிருப்புக்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் அயலிலுள்ள காட்டுப் பிரதேசங்களிலிருந்து விஷப்பாம்புகள் மக்கள் குடியிருப்புக்களை நோக்கி படையெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், விஷப்பாம்புபொன்று ஒருவரைத் தீண்டிய நிலையில் அவர் மூதூர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, மூதூரிலிருந்து கந்தளாய் ஊடாக திருமலைக்கான வீதி நீரில் மூழ்கியுள்ளதனால்  தரைவழிப்  போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றம் காரணமாக கடல்வழிப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் மூதூர் தளவைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டிய நோயாளர்களை எடுத்துச் செல்ல முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அத்தோடு மூதூருக்கான தரைவழி மற்றும் கடல் வழிப் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பித்துள்ளதனால் அத்தியவசியப் பொருட்களை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .