2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கிழக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகம் இடமாற்றம்

Kogilavani   / 2011 மே 03 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட், அப்துல் சலாம் யாசீம்)

கிழக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகம் நேற்று திங்கட்கிழமை முதல் திருகோணமலை கண்ணியா வீதி, வரோதய நகரில் அமைந்துள்ள கட்டிடப் பிரிவுக்கு இடமாற்றப்பட்டு செயற்பட்டு வருகின்றது.

அத்துடன் பிரதி பிரதம செயலாளர் நிருவாக அலுவலகம், மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகம், மாகாண கிராம அபிவருத்தித் திணைக்களம் என்பனவும் அக்கட்டிடத் தொகுதியிலேயே இயங்கி வருகின்றன.

எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் ஏனைய பிரதி செயலாளர் அலுவலகங்களும் கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகமும் அங்கு இடமாற்றப்படவுள்ளதென கிழக்கு மாகாண பிரதம செயலாளர் வீ.பி.பாலசிங்கம் தெரிவித்தார்.

இவ் அலுவலகங்கள் யாவும் இதற்கு முன்னர் திருகோணமலை உட்துறைமுக வீதியில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X