2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மொறவெவவில் நடமாடும் சேவை

Menaka Mookandi   / 2011 மே 06 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)

திருகோணமலை, மொறவெவ பொலிஸ் பிரிவினரால் நாளை சனிக்கிழமை நடமாடும் சேவையொன்றினை சிங்கள மகா வித்தியாலயத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நடமாடும் சேவையானது நாளை காலை 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 3.00 மணிவரை இடம்பெறவுள்ளதாக மொறவௌ பொலிஸ் பொறுப்பதிகாரி தம்மிக விஐயசிங்க தெரிவித்தார்.

கண்பரிசோதனை, ஆயுர்வேத வைத்திய வசதி, தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான புகைப்பட வசதி, பொலிஸ் சட்ட ஆலோசனைகள், பிறப்பு, இறப்பு பதிவுகள் வழங்கல், பிரதேச செயலகத்தினால் வழங்கப்படவுள்ள அனைத்து வசதிகளும் இதன்போது இடம்பெறவுள்ளதாகவும் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X