2025 மே 13, செவ்வாய்க்கிழமை

திருமலை சிறைக்கைதி வைத்தியசாலையில் மரணம்

Super User   / 2011 மே 06 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் சலாம் யாசிம்)

திருகோணமலை சிறைச்சாலை கைதி ஒருவர் திருமலை பொது வைத்தியசாலையில் இன்று வெள்ளிக்கிழமை மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

மூதூர் பகுதியை சேர்ந்த 64 வயதான எஸ்.கந்தசாமி என்பவரே மரணமானவராவார்.

குறித்த நபருக்கு கொலை குற்றச்சாட்டின் பேரில் மூதூர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பையடுத்தே அவர் திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.

கடந்த 15 நாட்களாக திருகோணமலை வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்துள்ளார்.

அவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X