2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கிண்ணியா பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி

Menaka Mookandi   / 2011 மே 10 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிண்ணியா கல்வி வலயத்தின் கிண்ணியா கோட்டமட்ட பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி இன்று செவ்வாய் கிழமை மாலை கிண்ணியா எழிலரங்கு மைதானத்தில் நடைபெற்றது.

கிண்ணியா வலயக்கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹசீம் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக கிண்ணியா நகரசபை தவிசாளர் டாக்டர் எம்.எம்.ஹில்மி மஹ்ரூப் கலந்து கொண்டார்.

இப்போட்டியில் தி/கிண்ணியா மத்திய கல்லூரி 337 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தையும், தி/அல் - அக்ஸா கல்லூரி 150 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தையும், தி/அப்துல் மஜீத் வித்தியாலயம் 25 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X