2025 ஜூலை 02, புதன்கிழமை

பிரதியமைச்சரின் பாதுகாப்பு வாகனம் விபத்தில் சிக்கி இருவர் காயம்

Super User   / 2011 மே 18 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலை  பஸ் தரிப்பிடத்துக்கு அருகாமையில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கெப் வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீன்பிடித்துறை பிரதியமைச்சரின் சுசந்த புஞ்சிநிலமேயின் பாதுகாப்பு வாகனமே விபத்தில் சிக்கியுள்ளது.

இந்த விபத்தில் முன்னாள் கிண்ணியா நகர சபை உறுப்பினரான எம்.சீ.ஏ.கபூர் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .