2025 ஜூலை 02, புதன்கிழமை

கிழக்கின் அறிவியல் கண்காட்சிக்கு கிழக்கு மாகாண ஆளுநர் விஜயம்

Kogilavani   / 2011 மே 26 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.பரீட், எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கிண்ணியாவில் இடம்பெறும் கிழக்கின் அறிவியல் கண்காட்சியின் நான்காவது நாளான இன்றைய தின நிகழ்வில், கிழக்கு மாகான ஆளுநர் ரியல் அட்மிரல் மொஹான் விஜே விக்கிரம பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

கிழக்கு மாகாண தவிசாளர் சட்டத்தரணி எச்.எம்.எம்.பாயிஸ் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம்.நிஸாம், மற்றும் கிண்ணியா வலயக்கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம்.ஹாசீம்,வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எம்.தௌபீக்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 
இவ்வைபத்தில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் கண்டு பிடிப்பு வாகனத்தில் சென்று  மாணவர்களின் கண்காட்சியைப் பார்வையிட்டமைக் குறிப்பிடத்தக்கது.

மேலும் இக்கண்காட்சியை பார்வையிடுவதற்காக பல பாகங்களிலிருந்தும் மாணவர்களும் பெற்றோர்களும் வருகைத் தந்தவண்ணமுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .