2025 ஜூலை 03, வியாழக்கிழமை

பாடசாலை மாணவர்கள் வகுப்பு பகிஸ்கரிப்பு

Menaka Mookandi   / 2011 ஜூன் 09 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

தோப்பூர், அல்ஹம்றா மகா வித்தியாலய மாணவர்களால் இன்று வியாழக்கிழமை வகுப்பு  பகிஸ்கரிப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இப்பாடசாலையில் கற்பித்தல்  நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த 11 ஆசிரியர்கள் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்தே இந்த வகுப்பு பகிஸ்கரிப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய பாடசாலைகளில் மேலதிகமாக உள்ள ஆசிரியர்கள் முதல் கட்டமாக வலயங்களுக்கு உள்ளே இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இது விடயமாக மூதூர் வலயக் கல்வி பணிப்பாளர் அ.விஜயானந்தமூர்த்தியுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது பாடசாலைகளில் பாடங்கள் ரீதியாக மேலதிகமாக உள்ள ஆசிரியர்கள் முதல் கட்டமாக வலயங்களுக்குள் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதிலாக வேறு ஆசிரயர்கள் இன்னும் ஓரிரு தினங்களுக்குள் நியமிக்கப்படுவார்கள் என்று குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .