Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜூன் 10 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்சலாம் யாசிம்)
திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கும்புறுப்பிட்டி 06ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பன்றிக்கு வைத்த மின்சார வேலியில் இன்று வெள்ளிக்கிழமை காலை சிக்கி மரணமடைந்துள்ளதாக குச்சவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.
கனபதி பிரகாஸ் (வயது 22) என்பவரே மின்சார வேலியில் அகப்பட்டு மரணமடைந்தவர் ஆவார்.
வெங்காயத் தோட்டத்தை பன்றிகள் நாசம் செய்து வருகின்றன. இதனால் பன்றிகளை கட்டுப்படுத்துவதற்காக மின்சார வேலி அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பிரேத பரிசோதனைக்காக சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் குச்சவெளிப் பொலிஸார், மின்சாரத்தை இணைப்புச் செய்த தோட்டக்காரரையும் தேடிவருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago