2025 மே 13, செவ்வாய்க்கிழமை

சமூக சேவைகள் அமைச்சின் நடமாடும் சேவை

Super User   / 2011 ஜூன் 18 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

 சமூக சேவைகள் அமைச்சின் நடமாடும் சேவையொன்றும் ஊக்குவிப்புக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வும் இன்று சனிக்கிழமை தம்பலகாமம் பிரதேசத்தில் முள்ளிப் பொத்தானை சிங்கள மகா வித்தியாலயத்தில் நடை பெற்றது.

 சமூக சேவைகள் அமைச்சர்  பீலிக்ஸ்பெரேரா  தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் புத்த சாசன பிரதி அமைச்சர் எம்.கே.டீ.எச்.குணவர்;தன, மீன்பிடி துறை நீரியல் வள பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே கிழக்கு மாகாண சபைஉறுப்பினர்களான ஆரியவதி கலப்பதி, நிமால் ஹாமினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நடமாடும் சேவையில் தெரிவு செய்யப்பட்ட விசேட தேவையுடையவவர்களான 18 பேருக்கு தலா  18 ஆயிரம் ரூபா வீதம் காசோலையும் மற்றும் 10 பேருக்கு  சக்கர நாட்காலி வண்டிகளும் ஆயிரம் பேருக்கு  மூக்குக் கண்ணாடிகளும்  வழங்கப்பட்டன. முதியோர்களுக்கான அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X