2025 மே 13, செவ்வாய்க்கிழமை

'திருமலை மாவட்ட ஆசிரியர் இடமாற்றத்தில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது'

Super User   / 2011 ஜூன் 18 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை மாவட்டத்தில் ஆசிரியர் இடமாற்றங்களில் அரசியல் தலையீடு இருக்ககூடாது.  மாணவர்களின் கல்வியை குறிக்கோளாக கொண்டு அனைவரும் செயற்பட வேண்டும் என  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் தெரிவித்தார்.

திருகோணமலை ஊடக  இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே  அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மற்றொரு மாகாண சபை  உறுப்பினர் பரீட் உரையாற்றுகையில்,  'பாடசாலைகள் இனம், மதம் என்பனவற்றுக்கு அப்பால் இருந்து செயற்பட வேண்டும். எந்த ஒரு பாடசாலையினதும் பெயர்கள் ஒரு இனத்தை மதத்தை குறிப்பிடுவதாக அமையக் கூடாது' என்றார்
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X