2025 மே 13, செவ்வாய்க்கிழமை

'ஒரு தென்னை மரம்' நூல் வெளியீடு

Menaka Mookandi   / 2011 ஜூன் 19 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிண்ணியா டைம்ஸ் பத்திரிகையின் ஏற்பாட்டில் கலாபூஷணம் கிண்ணியா ஏ.எம்.எம்.அலி எழுதிய 'ஒரு தென்னை மரம்' சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கலாநிதி கே.எம்.எம்.இக்பால் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பாவாரம் கவிஞர் அ.கௌஹிதாசன், நூல் அறிமுகவுரை கலாபூசணம் மூதூர் முகைதீன், நூல் நயவுரை எழுத்தாளர் திருமலை நவம், நூல் மதிப்பீட்டுரை உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.ஸீ.எம்.முஸ்இல் ஆகியோர் நிகழ்த்தினர்.

இந்த நிகழ்வில் கிண்ணியா நகரசபை உதவித் தவிசாளர் சட்டத்தரணி எம்.சீ.சபறுள்ளா, சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.ஜெகஜோதி, மூதூர் கலைமேகம், மூத்த எழுத்தாளர் ராகிலா மஜ்னூன், நீங்களும் எழுதலாம் ஆசிரியர் எஸ்.ஆர்.தனபாலசிங்கம், கவிஞர்களான அ.கௌரிதாசன், ஐ.ஏ.ஹசன், எம்.ரீ.சஜாத், ஏ.நஸ்புள்ளா, எம்.பெரோஸ்கான், ஏ.கே.முஜாரத், முன்னாள் தவிசாளர் எம்.எச்.ஏ.கரீம் உட்பட பல எழுத்தாளர்களும் கவிஞர்களும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X