2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றம் குறித்து ஆசிரியர் சங்கம் ஆளுநரை சந்திக்கத் திட்டம்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 20 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிழக்கு மாகாணத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சர்ச்சைக்குரிய இடமாற்றங்களை நிறுவத்துவது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜயவிக்கிரமவை இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம், கிழக்கு மாகாண தமிழர் ஆசிரியர் சங்கம், ஸ்ரீலங்கா இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் ஆகிய நான்கு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று இன்று திங்கட்கிழமை சந்திக்கின்றது.

இது குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோஸப் ஸ்ராலின் கூறுகையில்,

"வருடத்தின் நடுப்பகுதியில் இந்த இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளமையால் பாடசாலைகளின் இயல்பான தொழிற்பாடுகளும் மாணவர்களின் கல்வியும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த இடமாற்றங்கள் தேசிய இடமாற்றக் கொள்கையை பூரணமாக அலட்சியம் செய்துள்ளதுடன், அதற்கு முற்றிலும் முரணான வகையில் செய்யப்பட்டுள்ளன.

ஆளுநருடனான சந்திப்பு பலன் தராதவிடத்து எமது தொழிற்சங்க நடவடிக்கைகளை நாம் விரிவுபடுத்த வேண்டியிருக்குமென்பதையும் கூறுகின்றோம்" என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X