2025 மே 13, செவ்வாய்க்கிழமை

சூரங்கல் ஆயிலியடி வீதியை புனரமைக்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2011 ஜூன் 21 , மு.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.பரீட்)

கிண்ணியா பிரதேசத்தின் சூரங்கல் ஆயிலியடி வீதி  புனரமைப்பு பணிகளுக்காக  வீதி அபிவிருத்தி அதிகாரசபை 50 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்துள்ள நிலையில், சூரங்கல் ஆயிலியடி வீதி  புனரமைப்பு பணிகள் கூடிய விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.
 
கிண்ணியா மக்கள் மட்டுமன்றி வேறு பிரதேச மக்களினாலும் பயன்படுத்தப்படுகின்ற இந்த வீதி,   அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றது.
 
இந்த வீதியை உடனடியாகப் புனரமைப்பு செய்வதற்கு  நடவடிக்கை எடுக்குமாறு
திருகோணமலை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்
எம்.எஸ்.தௌபீக் வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இந்த வீதி புனரமைக்கப்படவுள்ளது.

இதற்கான கேள்விப்பத்திரம் உடனடியாக கோரப்பட்டிருப்பதால், வேலைகளை உடனடியாக ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறு காணப்படுவதாக எம்.எஸ்.தௌபீக் எம்.பி. தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0

  • naseer Wednesday, 22 June 2011 01:41 AM

    ஏதோ கிண்ணியவில் நடந்தால் சரி.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X